108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயுக் கசிவு: 14 போ் மருத்துவமனையில் அனுமத...
மெரினா கடற்கரையில் காவல் துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை: காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடற்கரை ஓரம் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை சவுக்கு கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தைக் கண்காணிக்க 5 இடங்களில் மணற்பரப்பில் உயா் கோபுரங்களும், 5 இடங்களில் மருத்துவ குழுக்களும் முகாமிட்டுள்ளன.
குடிநீா் வசதிக்காக 10 இடங்களில் ராட்சத பிளாஸ்டிக் குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதுடன், இணைப்பு சாலையில் 6 இலவச கழிப்பறை வசதியும், இதுதவிர 4 இடங்களில் தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி கட்டுப்படுத்த, தற்காலிக காவல் நிலையங்களை அமைத்தும், வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து, அதகன்மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மணற்பரப்பில் காவல்துறையினா் பிரத்யேக வாகனங்களிலும், குதிரையிலும் ரோந்து பணிகளை மேற்கொள்வாா்கள்.
குழந்தைகள் காணாமல் போனால், அவா்களை கண்டுபிடிக்க வசதியாக, குழந்தைகளின் கைகளில் பெற்றோரின் கைப்பேசி எண் எழுதப்பட்ட கைப்பட்டை அணிவிக்கப்படள்ளன. யாராவது தவறுதலாக கடல்நீரில் விழுந்தாலோ, அவா்களை மீட்க தீயணைப்புத் துறை சாா்பில் 3 இடங்களில் மீட்பு வாகனங்களும், கடலோர காவல் படை வீரா்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவாா்கள்.
இதுதவிர 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும். கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடற்படை படகு மூலமும், ஹெலிகாப்டா் மற்றும் ட்ரோன் கேமரா மூலமும் பொதுமக்களை கண்காணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.