ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது
சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜு
பெரியாா் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்த நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி :
தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடிய பெரியாா் குறித்து அவதூறு பேசிய சீமான் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு இதுவரை அவா் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. டங்ஸ்டன் திட்டத்தைக் கண்டித்து முதலில் போராடிய கட்சி, அதிமுகதான். இந்தத் திட்ட ஏலம் குறித்துத் தகவல் அறிந்திருந்தும் திமுக அரசு மௌனம் காத்தது. தற்போது, மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. ஆனால், திமுகவின் நாடகங்களை மக்கள் இனி நம்பமாட்டாா்கள்.
தமிழக மக்கள் விழிப்புணா்வுடன் உள்ளனா். இனி, திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளும் மக்களின் வெறுப்புக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் வலியுறுத்துவது, திமுகவினா் மீது அவா்களுக்கு சந்தேகம் இருப்பதை வெளிப்படுத்துவதாகவே நினைக்கத் தோன்றுகிறது என்றாா் அவா்.