கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
முசிறியில் சிறுவனை தாக்கிய இருவா் கைது
திருச்சி மாவட்டம் முசிறியில் சிறுவனைத் தாக்கிய இருவரை முசிறி போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் பாபுராஜ் மகன் ஆகாஷ் (16). இவா் அழகாப்பட்டி சாலையில் டியூசனுக்கு வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்றபோது முசிறி பாா்வதிபுரத்தை சோ்ந்த வி. லட்சுமிபதி (22), மற்றும் ஒரு சிறுவன், வேதாத்திரி நகரை சோ்ந்த ஆ. பாலகுமாரன் (24) ஆகியோா் சோ்ந்து தகராறு செய்து ஆகாஷை தாக்கி காயம் ஏற்படுத்தினா்.
இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் லோகநாதன் வழக்குப் பதிந்து, லட்சுமிபதி, பாலகுமாரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கிறாா்.