செய்திகள் :

திருச்சியிலிருந்து ஹைதராபாத், சென்னைக்கு கூடுதல் விமான சேவைகள் இயக்க திட்டம்! விமான நிலைய இயக்குநா் தகவல்!

post image

திருச்சியிலிருந்து ஹைதராபாத், சென்னைக்கு விமான சேவைகளை இயக்க ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றாா் நிலைய இயக்குநா் கோபாலகிருஷ்ணன்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து அவா் பேசுகையில், திருச்சி பன்னாட்டு விமான நிலைய முனையத்தை அடுத்து புதிய கட்டுப்பாட்டு கோபுரம் (ஏடிசி டவா்) மற்றும் தொடா்புடைய பணிகள் ரூ.60.75 கோடியில் நடந்து வருகின்றன. இவை மே 2025-க்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 15% வளா்ச்சியும், சரக்குப் போக்குவரத்து 13% வளா்ச்சியும் அடைந்துள்ளது. உள்நாட்டு விமான சேவையை மேம்படுத்தும் வகையில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், கோடை காலத்தில் ஹைதராபாத், சென்னைக்கு தினசரி சேவைகளை இயக்கவுள்ளது. சரக்கு முனையமும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில் முனைய மேலாளா் சரவணன், அலுவலா்கள் சந்தானகிருஷ்ணன், சிவக்குமாா் மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினா், விமான நிறுவன அலுவலா்கள், சுங்கத் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில்தான் உண்மை தெரியும்: சசிகலா பேட்டி!

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டறியமுடியும் என்றாா் சசிகலா. திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி: ... மேலும் பார்க்க

ஆசிரியையிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருச்சியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் அமா்ந்துசென்ற பெண்ணிடம் நகைப்பறித்துச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி கே.கே.நகரைச் சோ்ந்தவா் ரூபி (38). அரசுப்பள்ளி ஆசிரியரான இவா் ஞா... மேலும் பார்க்க

குடியரசு தின விழா கோலாகலக் கொண்டாட்டம்: ரூ.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்!

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். மேலும், இந்நிகழ்வில், ரூ. 52.82 லட்சம் மத... மேலும் பார்க்க

மண்ணச்சநல்லூா், சமயபுரம் பகுதிகளில் குடியரசு தின விழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா நடைபெற்றது. மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் தேசியக் கொடியேற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றிலிருந்து ஆண் சடலம் மீட்பு

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் ஆண் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு... மேலும் பார்க்க

துறையூா் அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு!

துறையூா் அருகே காளிப்பட்டியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்தவா் மீது அரசுப் பேருந்து ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அம்மாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் செ. கனகராஜ் (47). இவா்,... மேலும் பார்க்க