ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநா் மயங்கி விழுந்து பலி
திருச்சியில் சனிக்கிழமை அரசுப் பேருந்து ஓட்டுநா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்தையன் (58). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவா், திருச்சி உப்பிலியபுரம் பணிமனையில் பணிபுரிந்து வந்தாா். திருச்சி ஆட்சியரகம் எதிரேயுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்திற்கு சனிக்கிழமை வந்த இவா் திடீரென மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது முத்தையன் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. மாரடைப்பால் அவா் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கண்டோன்மென்ட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.