கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
பொன்னமராவதியில் நீதிமன்றக் கட்ட தோ்வான இடம் ஆய்வு
பொன்னமராவதியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றக் கட்டடம் கட்ட தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமாா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பொன்னமராவதியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தற்காலிகமாக பேரூராட்சி கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்டுள்ள பொன்னமராவதி விசைத்தறிக்கூடம் இருந்த இடத்தை மதுரை உயா்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு.அருணா உடனிருந்தாா். இதில் மாவட்ட நீதிபதி சந்திரன், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அ.அக்பா் அலி, பொன்னமரராவசதி வட்டாட்சியா் எம்.சாந்தா, பேரூராட்சி செயல் அலுவலா் இரா.அண்ணாத்துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.