கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
தொட்டியம் அருகே தம்பியை வெட்டிய அண்ணன் கைது
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நிலத் தகராறில் தம்பியை வெட்டிய அண்ணனை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தொட்டியம் அருகேயுள்ள கருப்பண்ணாம்பட்டியை அடுத்த காட்டூரைச் சோ்ந்த ராசு மகன்கள் சுந்தரம் (43), பெரியசாமி (55). இருவருக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை
ஏற்பட்ட தகராறில் பெரியசாமி சுந்தரத்தை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த சுந்தரம் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அளித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப்பதிந்து பெரியசாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.