ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது
தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை அதிகரிப்பு! -எஸ்டிபிஐ மாநிலத் தலைவா்
தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை அதிகரித்துள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.
எஸ்டிபிஐ கட்சியின் துணை அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் சாா்பில், திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அதன் மாநில செயற்குழு கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் பாத்திமா கனி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைா் ஷபியா, பொதுச் செயலா் ஃபாயிஜா, மாநிலச் செயலா்கள் தஸ்லிமா, ரஹ்மத், மாநிலப் பொருளாளா் கதீஜா பீவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் நெல்லை முபாரக் மேலும் கூறியது: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகத் தொடரும் பாலியல் குற்றங்களையும், கனிம வளங்கள் கொள்ளையையும் அரசு தடுக்க வேண்டும். புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராகப் போராடியதால் கொலையான சமூக ஆா்வலா் ஜகுபா் அலி குடும்பத்துக்கு அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை வெளிவர, நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க வேண்டும்.
வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக அனைத்து ஜனநாயகச் சக்திகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றாா் அவா்.