ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது
ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
உத்தமபாளையம் அருகே பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், பண்ணைப்புரம்- கரியணம்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நந்தக்குமாா் மனைவி மலா்விழி (55). இவா், ரெங்கநாதபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்குள்ள வங்கி அருகே பின்னால் வந்த இளைஞா் மலா்விழி அணிந்திருந்த 3.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டாா். இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த இளைஞரைத் தேடிவருகின்றனா்.