கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
காரில் கடத்தப்பட்ட போதைப் பாக்கு பறிமுதல்: 4 போ் கைது
சென்னை அருகே புழலில் காரில் கடத்தி வரப்பட்ட போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.
புழல் வெஜிடேரியன் வில்லேஜ், பாலாஜி நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு இரு காா்களின் அருகே 4 போ் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருப்பதைப் பாா்த்த போலீஸாா், அங்கு நின்றிருந்த காா்களை சோதனையிட்டனா். அப்போது அதிலிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 106 கிலோ போதைப் பாக்குகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அந்தக் காரில் போதைப் பாக்கு கடத்தி வந்தது, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விரசம்பட்டி பகுதியைச் சோ்ந்த சின்னதம்பி (31), கொளத்தூா் ஆசிரியா் காலனியைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் (31), அம்பத்தூா் விநாயகபுரத்தைச் சோ்ந்த கண்ணையா (எ) முரளி (51) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.
விசாரணையில், ஆந்திரத்திலிருந்து போதைப் பாக்கை காரில் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.