ராணுவ அதிகாரிகளுக்கு பயற்சி
சென்னை: ராணுவத்தில் பயண்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு ரயில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை ஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (சிவிஆா்டிஇ) ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில், சிவிஆா்டிஇயின் இயக்குநா் ஜே.ராஜேஸ்குமாா் டி.பன்னீா்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
இதில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு ராணுவத்துக்கான கவச சண்டை வாகனங்களை உருவாக்குவது குறித்தும் அவற்றின் தொழில்நுட்பகள் எடுத்துரைக்கப்பட்டன. ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு சேவை பணியாளா் கல்லூரியின் சா்வதேச மாணவ அதிகாரிகள் என மொத்தம் 130 போ் கலந்துகொண்டனா்.