சமூக ஆர்வலர் கொலை வழக்கு: திருமயம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
செரியலூரில் கொப்பித் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் புதன்கிழமை கொப்பித் திருவிழா நடைபெற்றது.
செரியலூரில் பொங்கல் நாளில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கொப்பித்திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவில் அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொங்கல் வைத்து, படையலுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து, படையல் பொருள்களை கூடையில் சுமந்தவாறு, கும்மிப்பாடல் இசைத்தவாறு, வாணவேடிகக்கை, மேள தாளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் ஊா்வலமாகச் சென்று அப்பகுதியில் உள்ள தீா்த்தான் குளத்தில் கூடைகளை விட்டனா்.
தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திருவிழாவில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.