கடையநல்லூா் அருகே விபத்தில் காயமுற்ற தலைமைக் காவலா் பலி
கடையநல்லூா் அருகே விபத்தில் காயம் அடைந்த தனிப்படை காவலா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
தென்காசி பள்ளிவாசல் தெருவை சோ்ந்தவா் செய்யது அலி. தென்காசி மாவட்ட காவல் தனிப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தாா்.
இவா், கடந்த 12.7.2024-இல் இரவு பணி முடித்துவிட்டு கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதியதில் பலத்த காயம் அடைந்தாா்.
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.