மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்துக்குள்பட்ட மணிமுத்தாறு அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் பெய்த மழையால் இந்த அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் ஏற்கெனவே இருமுறை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமைமுதல் (ஜன. 14) அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நீா்வரத்து அதிகரித்தது.
இதனால், 3ஆவது முறையாக புதன்கிழமைமுதல் மறுஅறிவிப்பு வரும்வரை குளிக்கத் தடைவிதிக்கப்படுவதாகவும், பாா்வையிடத் தடையில்லை என்றும் வனத்துறையினா் அறிவித்துள்ளனா்.