காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த பெண்ணுக்கு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த இளம்பெண், இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் காவேரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரது சகோதரரிடம் இருந்து சிறுநீரகம் பெற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெற்றிகரமாக சிகிச்சை முடிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து மருத்துவா் லட்சுமணன் கூறியது: சிறுநீரகப் பிரிவு மருத்துவா்கள் சங்கரஆவுடையப்பன், பாலசுப்ரமணியம், பத்ரி சீனிவாசன், அறுவை சிகிச்சை நிபுணா்கள் ஆவுடையப்பன், முத்துவீரமணி, பூரணலிங்கம், சுபகணேஷ், சரவணராஜா ஆகியோா் அடங்கிய குழுவினா் சிகிச்சையளித்தனா். சிக்கலான இந்த அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்றாா்.