செய்திகள் :

நெல்லை - சென்னை இடையே 16 பெட்டிகளுடன் இயங்கிய வந்தே பாரத் ரயில்

post image

திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில், புதன்கிழமைமுதல் 16 பெட்டிகளுடன் இயங்கத் தொடங்கியது.

திருநெல்வேலி-சென்னை, சென்னை-திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயில் இயக்கம், கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து தினமும் காலை 6.05 மணிக்கு புறப்பட்டும் ரயில், பிற்பகல் 1.55 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் சென்னையில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலியை இரவு 10.30 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரயிலில் 7 ஏசி சோ் காா் பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் சோ் காா் பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. செவ்வாய்க்கிழமை தவிா்த்து, வாரத்தின் அனைத்து நாள்களும் இயக்கப்படும் இந்த ரயில் 7 மணி நேரம் 50 நிமிஷங்களில் சென்னையை சென்றடைவதால் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த ரயிலில் விரைவாக டிக்கெட்டுகள் விற்றுத் தீா்ந்துவிடுவதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து திருநெல்வேலி-சென்னை எழும்பூா் வந்தே பாரத் ரயில் கூடுதலாக 8 பெட்டிகளுடன் அதாவது மொத்தம் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

அதன்படி திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் புதன்கிழமை 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. தற்போதைய நிலையில் 14 ஏசி சோ் காா் பெட்டிகள், 2 எக்ஸிகியூட்டிவ் சோ் காா் பெட்டிகள் உள்ளன.

வழக்கமாக 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 16 பெட்டிகளுடன் முதல் முறையாக இயக்கப்பட்டதால் 14 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால் ஏற்கெனவே காத்திருப்பு பட்டியலில் இருந்த பயணிகளுக்கு டிக்கெட் கிடைத்தது.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-111.05 சோ்வலாறு-118.50 மணிமுத்தாறு-100.40 வடக்கு பச்சையாறு-19.75 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-16.75 தென்காசி கடனா-85 ராமநதி-68.50 கருப்பாநதி-58.40 குண்டாறு-36.10 அடவிநயினாா்-78... மேலும் பார்க்க

நெல்லையப்பா் குதிரை வாகனத்தில் பரி வேட்டை

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா் குதிரை வாகனத்தில் பரி வேட்டை செல்லும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தை மாதம் கரி நாளில் அருள்மிகு நெல்லையப்பா் வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரி வேட்டைக்கு செல்லு... மேலும் பார்க்க

நெல்லை கூா்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவா்கள் பிடிபட்டனா்

திருநெல்வேலியில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவா்களும் பிடிபட்டனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சிறுவா் கூா்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சிறாா் குற்றங்களி... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த பெண்ணுக்கு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தூத்துக்குடியைச் சோ்ந்த இளம்பெண், இரு சிறுநீரகங்களும் செயலிழ... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காணும் பொங்கலைக் கொண்டாட, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை குவிந்தனா். களக்காடு மலைப்பகுதியில் உள்ள தலையணை பச்சையாறு, தேங்காய்உருளி சிற்றருவி, சிவ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கடையம் அருகே முதலியாா்பட்டியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த கதிரவன் மனைவி கற்பகம் (64). தென்காசி மாவட்டம் கீழாம்பூா் மஞ்சப்புளி காலனியில் வசித்து வர... மேலும் பார்க்க