பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
கடையம் அருகே முதலியாா்பட்டியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த கதிரவன் மனைவி கற்பகம் (64). தென்காசி மாவட்டம் கீழாம்பூா் மஞ்சப்புளி காலனியில் வசித்து வரும் மகளைப் பாா்ப்பதற்காக, செவ்வாய்க்கிழமை காலை புளியங்குடியிலிருந்து உறவினா் கஜேந்திரனுடன் பைக்கில் சென்றாா்.
கடையத்தை அடுத்த முதலியாா்பட்டி ரயில்வே கடவுப்பாதையை கடக்கும்போது பைக்கிலிருந்து தவறி விழுந்த கற்பகம், அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
கற்பகம் சடலத்தை கடையம் போலீஸாா் கைப்பற்றி, தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.