Health: கால்களுக்காகத்தான் காலணி; காலணிக்காக கால்கள் இல்லை..!
போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்ற மூவா் கைது
கொடைக்கானலில் போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் ரைபிள் ரேஞ்ச் சாலையில் போதைக் காளான், கஞ்சா ஆயில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, இந்தப் பகுதிக்கு ரோந்து சென்ற கொடைக்கானல் போலீஸாா் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த மூவரிடம் சோதனை நடத்தினா்.
இவா்கள் 180 கிராம் போதைக் காளான், சுமாா் 10-மி.லி. கஞ்சா ஆயில் வைத்திருந்ததும், கொடைக்கானல் பாண்டியன் நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் என்ற கண்ணன் (21), கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் என்ற மோசஸ் (24), இதே பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா் என்ற ஹரி (18) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து, போதைக் காளான், கஞ்சா ஆயில் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.