நிலக்கோட்டை அருகே இருவா் தற்கொலை
நிலக்கோட்டை அருகே பெண் விஷம் குடித்தும், இவருடன் தகாத உறவில் இருந்த இளைஞா் கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா் சகாயராஜ். இவரது மனைவி ஆலீஸ் (31). இவா்களுக்கு சபரி பிரான்சிஸ் (10) என்ற மகன் உள்ளாா். பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சகாயராஜ் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்த ஜோசப் கென்னடி மகன் ஜெபஸ்டீன் ஜீவாவுக்கும் (33), ஆலீஸுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஜெபஸ்டீன் ஜீவா திருமணமாகாதவா்.
இந்த நிலையில், மைக்கேல்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் பாகற்காய் தோட்டத்து பந்தலுக்குள் இவா்கள் இருவரும் இறந்து கிடந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்து செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்கு வந்த நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு தோட்டத்துக்குள் சென்ாகவும், அங்கு ஆலீஸ் விஷம் குடித்தும், ஜெபஸ்டீன் ஜீவா கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து, நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].