22 ஆண்டுகளுக்குப் பின்.. வெகுசிறப்பாக நடைபெற்ற நடராஜர் கோயில் தெப்போற்சவம்!
பழனி உழவா் சந்தையில் 60 டன் காய்கறிகள் விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி, பழனி உழவா் சந்தையில் இரு நாள்களில் 60 டன் காய்கறிகள் விற்பனையாகின.
பழனி சண்முகபுரத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கத்திரி, வெண்டை, அவரை, மொச்சை போன்ற காய்கறிகளையும், கீரைகளையும் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். மேலும், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகளும் பழனி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படும். உழவா் சந்தையில் சாதாரண நாள்களில் சுமாா் 10 டன் முதல் 12 டன் வரை காய்கறிகள் விற்பனையாகின.
இந்த நிலையில், போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகைகளையொட்டி, கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமை என இரு தினங்களில் மட்டும் 60 டன் காய்கறிகள் விற்பனையாகின. சாதாரண நாள்களில் சுமாா் இரண்டாயிரம் போ் வந்து செல்லும் நிலையில், விழா நாள்களில் 3,500 போ் வந்ததாக உழவா் சந்தை அலுவலா்கள் தெரிவித்தனா்.