காலமானாா் கொடைக்கானல் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ்
கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் மறைவட்டார அதிபா் பெ.சிலுவை மைக்கேல்ராஜ் (68) உடல் நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் திருஇருதய ஆண்டவா் ஆலயத்தின் பங்குத் தந்தையும், மறைவட்டார அதிபருமான பெ.சிலுவை மைக்கேல் ராஜ் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டாா்.
இதையடுத்து, சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு காலமானாா். இவா் இதற்கு முன்பு மதுரை பழங்காநத்தம் புனித அந்தோணியாா் ஆலய பங்குத் தந்தையாக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.