நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் படுகாயம்!
BB TAMIL 8 : பணப்பெட்டி டாஸ்க்கில் ட்விஸ்ட்... வீடு திரும்ப முடியாமல் எவிக்ட் ஆன போட்டியாளர்?
இன்னும் மூன்றே தினங்களில் நிறைவு பெறவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8.
முதல் நாள் அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆக ஆட்டம் பாட்டம் என கலகலப்பாகத் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் ராணவ், ரயான், மஞ்சரி முதலான ஆறு பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இணைந்தனர்.
ஆக மொத்தம் இந்த சீசனில் 24 பேர் கலந்து கொள்ள, அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர்.
கடைசியில் கடந்த வாரம் தீபக், அருண் இருவரும் வெளியேற இதுவரை மொத்தம் பதினெட்டு பேர் வெளியேறி விட்டனர். சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான் ஆகிய ஆறு பேர் நிகழ்ச்சியில் தொடர்ந்தார்கள்.
இந்நிலையில் பொங்கல் அன்று பணப்பெட்டி வைக்கப்பட்டது. ஆறு பேரில் ஒருவர் பணப்பெட்டி எடுத்துச் செல்லும்பட்சத்தில் மீதி ஐந்து பேர் டாப் 5 ஆக கடைசி நாள் வரை இருப்பார்கள் என்றும் எனவே மிட் வீக் எவிக்ஷன் என எதுவும் இருக்காது எனவும் சொல்லப்பட்டது.
அதேநேரம் பணப்பெட்டி டாஸ்க்கை இந்த சீசனில் கொஞ்சம் வித்தியாசமாகக் கையாண்டு விட்டார் பிக்பாஸ். அதாவது ஒவ்வொரு சீசனிலும் பணப்பெட்டியில் சேரும் சுமார் பத்து முதல் பனிரெண்டு லட்சம் வரையிலான பணத்தை யாராவது ஒரேயொரு போட்டியாளர்தான் எடுத்துச் செல்வார். யார் எடுப்பார், எவ்வளவு பணம் அதில் சேரும் என ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கும்.
ஆனா வழக்கமான இந்த முறை இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் பணத்தை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட இடத்துக்கு ஓடி வர வேண்டும் என்ற சவாலைப் புதிதாகச் சேர்த்து விட்டார்கள்.
அப்படி வருகிறவர்கள் பெட்டியில் இருக்கும் பணத்துடன் கேமில் தொடரலாம். வர முடியாதவர்களுக்குப் பணமும் இல்லை, நிகழ்ச்சியிலும் தொடர முடியாது என்பதுதான் விதி.
இந்த முறைப்படி ரயான், முத்துக்குமரன் ஆகியோர் பணத்துடன் தங்கள் இலக்கை அடைந்து விட்டதால் அவர்கள் பணத்துடன் விளையாட்டில் தொடர்கிறார்கள். பெண்களில் பவித்ரா ஜனனியும் பணப்பெட்டி டாஸ்க்கில் ஜெயித்து விட்டதாகக் கூறுகிறார்கள்.
ஆனால் ஜாக்குலின் இந்த டாஸ்க்கில் தோல்வியடைந்து விட்டதால் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் ஆகி வெளியேறி இருக்கிறார் என் சொல்லாப்டுகிறது.
பணப்பெட்டி டாஸ்க் வித்தியாச முறையில் நிகழவிருக்கிறது என்றதுமே சில போட்டியாளர்களின் முகத்தில் ஒருவித அதிர்ச்சி தெரிந்தது. அதுவும் நூறு நாட்களை பிக்பாஸ் வீட்டில் கடந்து விட்ட ஜாக்குலின் ஓப்பனாகவே இதுகுறித்துப் பேசியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது அவரே வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சௌந்தர்யா, பவித்ரா, முத்துக்குமரன், ரயான், விஷால் ஆகிய ஐந்து பேர் நிகழ்ச்சியில் தொடர்கிற சூழலில் இவர்கள் கடைசி நாள் வரை நிகழ்ச்சியில் இருப்பார்கள் எனத் தெரிகிறது.
இவர்களில் டிக்கெட் டு ஃபினாலேவுக்குத் தேர்வான ரயான் மட்டும் வைல்டு கார்டு போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுதினம் பைனலுக்கான ஷூட் பிக்பாஸ் செட்டில் தொடங்கவிருக்கிற சூழலில் யாருக்கு சீசன் 8 ன் டைட்டில் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களை இப்போதே தொற்றிக் கொண்டது.
யார் டைட்டில் வெல்வார்கள் என நீங்க நினைக்கிறீங்க. கமெண்ட் செய்யுங்களேன்.