BB 8 : `முத்துக்குமரன் சில இடங்கள்ல சுயநலமாக யோசிச்சாரோனு தோனுச்சு; அதைதான்..' - மஞ்சரி ஓப்பன் டாக்
இறுதி நாட்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது `பிக் பாஸ் சீசன் 8'.
மஞ்சரி மற்றும் தீபக்கின் எவிக்ஷன் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சீசனின் மற்ற போட்டியாளர்களுக்கு கடினமான போட்டியாக ஆடிக் கொண்டிருந்த நபர்கள் வெளியேறிவிட்டனர் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. வீட்டிலிருந்து வெளியேறிய மஞ்சரியை சந்தித்து இப்படியான விஷயங்களுடன் அவரின் பிக் பாஸ் பயணம் குறித்து பேசினோம்.
``வெளில வந்ததும் பலரும் அடையாளப்படுத்தி பேசுறாங்க. அது ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுக்குது. முக்கியமாக பெண்கள் பலரும் பேசுறது சந்தோஷத்தைக் கொடுக்குது. இன்ஸ்டாகிராம்ல பலரும் மெசேஜ் பண்ணியிருக்காங்க, நான் அனைத்து மெசேஜ்களையும் படிச்சேன். `இதுவரைக்கும் நான் இப்படி இருந்தேன். உங்ககளைப் பார்த்த பிறகு ஒரு உத்வேகம் கிடைச்சிருக்கு'னு பலர் சொல்லும்போது நல்ல கேம் விளையாடியிருக்கேன்னு ஒரு திருப்தி கிடைக்குது. ஒரு கட்டத்துல என்னுடைய கேம் `Saturate' ஆகிடுச்சுனு நினைக்கிறேன். இதுவே நான் வெளியேறுனதுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதே சமயம் நல்ல விளையாடுறாங்க, நல்ல விளையாடல அப்படிங்கிறதை தாண்டி மக்களுக்கு பிடிச்சவங்க உள்ள இருக்காங்க.
இதுல ஃபேர், அன் ஃபேர்னு பேச்சுக்குள்ள நான் போக விரும்பல. சிலருக்கு ஃபேர்னு தோணும், சிலருக்கு அன்ஃபேர்னு தோணும். கடந்த வாரம் தீபக்கோட எவிக்ஷன் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தீபக் ஒரு ஸ்டான்டர்ட் அமைச்சிட்டார். அவர் ஃபைனல் மெட்டீரியலும்கூட. மக்களுக்கும் எனக்கும் அவர் ஃபைனல் போகணும்னுதான் ஆசையாக இருந்தது. அது நடக்காதது ஏமாற்றம்தான். " என்றவர், `` டிக்கெட் டு ஃபைனாலே வாரத்துல முத்துக்குமரன் பதற்றமாக இருந்ததை அவரே சொல்லியிருந்தாரு.
எல்லோருக்கும் அந்த டிக்கெட் ரொம்பவே முக்கியமானதாக இருந்தது. எல்லோருமே முனைப்போடதான் செயல்பட்டோம். அப்போது முத்துக்குமரன் சில இடங்கள்ல சுயநலமாக யோசிச்சாரோனு எனக்கு தோனுச்சு. அதைதான் நான் வீட்டுக்குள்ள சுட்டிக்காட்டியிருந்தேன். அதுதான் முரணாக வெளில தெரிஞ்சது." என்றவர் ஜாக்குலின் உடனான நட்பு குறித்து கூறுகையில், ``இந்த இடத்துலதான் எனக்கு ஜாக்குலினுக்குமான நட்பு தொடங்குச்சுனு கிடையாது. நட்பு கொஞ்சம் கொஞ்சமாகதான் வளர்ந்தது. 5 வருஷத்துக்கு முன்னாடி இருந்த என்னுடைய வெர்ஷனாக ஜாக்குலின் இருந்திருக்கலாம். அப்படி ஜாக்குலினை என்னால ரிலேட் பண்ணிக்க முடிஞ்சது. ஜாக்குலினுக்கு அன்பு தேவைப்படுது. நான் நிறைய லவ் கொடுத்தனானு கேட்டால்...கிடையாது.
அன்பு வேணும்னு ஏக்கம் இருக்கிறவங்களுக்கு கொஞ்சமாக அன்புக் கொடுத்தாலே நிறைய கிடைச்ச மாதிரி இருக்கும். ஜாக்குலினுக்கு என்னுடைய அன்பு ஆறுதலாக இருந்திருக்கு. சுனிதா, ஜாக்குலின் ஒவ்வொரு வாரமும் ஒருத்தர்கூட இருந்ததாக சொல்றாங்க. ஆனால், அவ்வளவு தீர்க்கதர்சியாக ஜாக்குலினுக்கு ஓட்டு பற்றி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல.
ஃபரண்ட்ஷிப்ல ஜாக்குலினுக்கு மைண்ட் ஷிப்ட் இருந்திருக்கு. அதுக்கான காரணங்களும் இருந்திருக்கு. முத்துக்குமரனுக்கும் ஜாக்குலினுக்கும் தொடக்கத்துல இருந்தே `டாம் & ஜெர்ரி' ஃப்ரண்ட்ஷிப் இருந்தது. சில இடங்கள்ல ஜாக்குலின் பண்ணினது எனக்கு பிடிக்காமல் இருந்திருக்கு. நாட்கள் நகர்ந்ததும் நம்ம மனிதர்களை புரிஞ்சுக்குவோம். அப்படி என்னை பற்றி ஜாக்குலினும், ஜாக்குலினைப் பற்றி நானும் புரிஞ்சுகிட்டு பரிமாறிய நட்புதான் கடைசில வெளில தெரிஞ்சது." என்றவர், `` ரானவை ஒரு இடத்துல நான் ஸ்பாயில்கிட்னு சொல்லியிருந்தேன்.
ரானவ் அம்மாவீட்டுக்குள்ள வந்த சமயத்திலையும் `நீங்கதான் மா, அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறீங்க'னு சொன்னேன். அது ஒரு உரிமைல நான் சொல்லிட்டேன். இந்த விஷயம் வெளில இருந்து பார்க்கிற அவங்க குடும்பத்தை காயப்படுத்தும்னு நான் யோசிக்காமல் சொல்லிட்டேன். அதை சொல்லியிருக்கக்கூடாதுனு நான் வெளில வந்ததும் வருதப்பட்டேன். சொல்லப்போனால், எனக்கும் பவித்ராவுக்குமான ப்ரண்ட்ஷிப் பற்றி வெளில பலருக்கு தெரியாது. அருண் - விஷால் மாறி மாறி கலாய்ச்சிக்கிற மாதிரிதான் நானும் பவித்ரா ரானவ் கலாய்ப்போம்." என்றவரிடம், `` `சிங்கிள் மதர் என்றும் சொல்கிறார், பார்ட்னர் என்றும் சொல்கிறார்' என சமூக வலைதளப் பக்கங்களில் உங்களின் பர்சனல் குறித்து பேசப்பட்டது. அதற்கு உங்களின் பதிலடி என்னவாக இருக்கும்?'' எனக் கேட்டதும், `` ஏன், சிங்கள் மதர் கடைசி வரைக்கும் சிங்கிளாகவேதான் இருக்கணுமா!'' எனக் கூறி முடித்துக் கொண்டார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...