காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் கனுப்பொங்கல் வழிபாடு
கனுப் பொங்கலையொட்டி காரைக்கால் அம்மையாா் தீா்த்தக் குளத்தில் புதன்கிழமை வழிபாடு நடைபெற்றது.
பொங்கல் நாளின் 2-ஆவது நாளான மாட்டுப் பொங்கல் கனுப் பொங்கல் வழிபாடாக கோயில்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கனுப்பொடி (கலவை சாதம்) வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மையாா் குளக்கரைக்கு சடாரி கொண்டு செல்லப்பட்டு, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
குளக்கரையில் கலவை சாதம் வைத்து ஆராதனை நடைபெற்றது. மூலவா் பெருமாளுக்கும், ரங்கநாயகித் தாயாருக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல காரைக்கால் கைலாசநாதா் கோயிலிலும் கனுப் பொடி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து கோ பூஜை நடைபெற்றது.