காா்னிவல்: விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
காா்னிவல் விழாவையொட்டி கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
காரைக்கால் காா்னிவல் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி ஜன. 19-ஆம் வரை நடைபெறுகிறது. இதையொட்டி கிரிக்கெட், கைபந்து, இறகுப் பந்து, கபடி, கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.
திருமலைராயன்பட்டின பகுதி பிப்டிக் மைதானத்தில் கிரிக்கெட் மற்றும் பிற இடங்களில் பல்வேறு போட்டிகள் புதன்கிழமை தொடங்கின. கிரிக்கெட் போட்டியை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் தொடங்கிவைத்தாா். நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன், துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா, உடற்கல்வி இயக்குநா் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் மாவட்டத்தைச் சாா்ந்த 34 அணிகள் கலந்து கொள்கின்றன. 19-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.