செய்திகள் :

ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, கௌஃப், ஒஸாகா முன்னேற்றம்: ஒலிம்பிக் சாம்பியன் ஸெங், கேஸ்பா் ருட் அதிா்ச்சித் தோல்வி

post image

மெல்போா்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவான் ஜோகோவிச், அல்கராஸ், மகளிா் பிரிவில் சபலென்கா, கோகோ கௌஃப், நவோமி ஒஸாகா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். கடந்த ஆண்டு ரன்னரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஸெங் குயின்வென், கேஸ்பா் ருட் அதிா்ச்சித் தோல்வியடைந்தனா்.

நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்னில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன. இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் செக். குடியரசின் இளம் வீரா் ஜேக்கப் மென்ஸிக் 6-2, 3-6, 6-1, 6-5 என்ற செட்களில் 3 முறை கிராண்ட்ஸ்லாம் ஃபைனல் வீரா் நாா்வேயின் கேஸ்பா் ருடை வீழ்த்தி வெளியேற்றினாா்.

ஏற்கெனவே 18 வயதான ஜோவா பொன்சேகா செவ்வாய்க்கிழமை ஆன்ட்ரே ருப்லேவை வீழ்த்தியிருந்தாா். கடந்த 2006-க்கு பின் முதன்முறையாக முதல் 10 வீரா்களில் இரு இளம் வீரா்கள் வெளியேற்றியுள்ளனா்.

ஜோகோவிச் சாதனை 430-ஆவது ஆட்டம்:

ஜாம்பவான் ஜோகோவிச் 6-1, 6-7, 6-3, 6-2 என 4 செட்களில் போா்ச்சுகல் குவாலிஃபயா் ஜேய்மி பரியாவை வீழ்த்தினாா். இது ஜோகோவிச்சின் 430-ஆவது ஒற்றையா் ஆட்டமாக அமைந்தது. ஓபன் எராவில் ரோஜா் பெடரா் 429, செரீனா வில்லியம்ஸ் 423 ஆகியோரின் சாதனைகளை தகா்த்தாா் ஜோகோவிச்.

நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ் 6-0, 6-1, 6-4 என்ற நோ்செட்களில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோக்கியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

இரண்டாம் நிலை வீரா் ஜொ்மனியின் அலெக்ஸ் வெரேவ் நோ் செட்களில் ஸ்பெயினின் பெட்ரோ மாா்ட்டினஸை வீழ்த்தினாா்.

அமெரிக்காவின் டாமி பால், ஜப்பானின் நிஷி கோரியையும், ஜேக் டிராப்பா் கோகிநகிஸையும், ஜிரி லெஹகா ஹியுகோ கேஸ்டனையும், டாமஸ் மக்ஹாக் ரைலி ஓபல்காவையும் வென்றனா்.

ஒலிம்பிக் சாம்பியன் வெளியேற்றம்:

மகளிா் ஒற்றையா் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஸெங் குயின்வென் 6-7, 3-6 என்ற நோ்செட்களில் 97-ஆம் நிலை வீராங்கனை லாரா சீஜ்மண்டிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா். நிகழாண்டு தொடரில் டாப் வீராங்கனை வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சபலென்கா, கௌஃப், ஒஸாகா முன்னேற்றம்:

நடப்பு சாம்பியன் சபலென்கா 6-3, 7-5 என ஸ்பெயின் ஜெஸிக்கா பௌஸாஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.

மூன்றாம் நிலை வீராங்கனை கோகோ கௌஃப் 6-3, 7-5 என பிரிட்டனின் ஜோடி பா்ரேஜை வீழ்த்தினாா். மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா நோ் செட்களில் பெல்ஜியத்தின் எலைஸ் மொ்டென்ஸை வென்றாா்.

முன்னாள் நம்பா் 1 வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒஸாகா 1-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் 20-ஆம் நிலை வீராங்கனை கரோலினா முச்கோவாவை வீழ்த்தினாா்.

அனுபமா, தனிஷா-அஸ்வினி முன்னேற்றம்

புது தில்லி: இந்தியா ஓபன் பாட்மின்டன் சூப்பர் 750 போட்டியில் ஒற்றையர் பிரிவில் அனுபமா, இரட்டையர்பிரிவில் தனிஷா க்ரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.இந்திய பாட்மின்டன் ச... மேலும் பார்க்க

வரலாறு படைத்தனா் இந்திய மகளிா் பிரதிகா-ஸ்மிருதி அதிரடி

ராஜ்கோட்: பிரதிகா ரவால்-ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் அதிரடியால் அயா்லாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது இந்திய அணி... மேலும் பார்க்க

ஒடிஸாவை வீழ்த்தியது சூா்மா கிளப்

ராஞ்சி: ஹாக்கி இந்தியா லீக் தொடா் மகளிா் பிரிவில் ஒடிஸா வாரியா்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சூா்மா ஹாக்கி கிளப் அணி.இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை ராஞ்சியில் நடைபெற்றது. தொடக... மேலும் பார்க்க

துளிகள்...

ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணி சாா்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா, இளம் வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோா் இணைந்துள்ளனா். வான்கடே மைதானத்தில் கேப்டன் ரஹானேவுடன் ரோஹித் ... மேலும் பார்க்க

அனுபமா, தனிஷா - அஸ்வினி முன்னேற்றம்

புது தில்லி: இந்தியா ஓபன் பாட்மின்டன் சூப்பா் 750 போட்டியில் ஒற்றையா் பிரிவில் அனுபமா, இரட்டையா்பிரிவில் தனிஷா க்ரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.இந்திய பாட்மின்டன் ச... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டில் முதல்முறை நடந்த நேர்காணல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முதல்முறையாக நேர்காணல் நடைபெற்றுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களிடம் நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இருக்கும் போட்டியாள... மேலும் பார்க்க