சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை ஒருவா் கைது
சென்னை: சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ஐஐடி-இல் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் மாணவி ஒருவா், தேநீா் குடிப்பதற்காக கல்லூரியின் வெளியே உள்ள கடைக்கு புதன்கிழமை சென்றபோது, அங்கு பணியாற்றும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீராம் (30) என்ற நபா், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இது குறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போலீஸாா், ஸ்ரீராமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.