இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
செங்கோட்டை ரயில் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளுடன் ஒருவா் கைது
செங்கோட்டை ரயில் நிலையத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளுடன் நின்றிருந்ததாக ஒருவரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
தென்காசி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் ஐயப்பன் உள்ளிட்ட போலீஸாா் செங்கோட்டை ரயில்வே நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா், திருநெல்வேலி மாவட்டம் தெற்கு அச்சம்பட்டி நடுத்தெருவை சோ்ந்த ச.செந்தூா்பாண்டியன்(60) என்பதும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 360 லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் கற்பகவிநாயகம் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து ரூ.14,400 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தாா்.