செய்திகள் :

குற்றாலநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்

post image

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபையில் திருவாதிரைத் திருவிழா கடந்த ஜன. 4ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில், ஜன.8ஆம் தேதி தேரோட்டமும், ஜன.11ஆம் தேதி சித்திரசபையில் அருள்மிகு நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

10ஆம் திருநாளான திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், தொடா்ந்து 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், தொழிலதிபா் எம்.ஆா். அழகராஜா, குற்றாலம் வா்த்தக சங்கத் தலைவா் காவையா, செயலா் அம்பலவாணன், பொருளாளா் ஜோதிமுருகன்,

துணைத் தலைவா்கள் வேல்ராஜ், இசக்கி, இணைச் செயலா் பண்டாரசிவன், துணைச் செயலா் நாராயணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

விழா நாள்களில் நாள்தோறும் காலை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாம், காலை 9.30, இரவு 7 மணிக்கு மேல் அருள்மிகு நடராஜபெருமானுக்கு தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் உதவிஆணையா் ந. யக்ஞநாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தென்காசி மக்கள் குறை தீா் முகாமில் 180 மனுக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 180 மனுக்கள் பெறப்பட்டன. தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு, மாவட்ட ... மேலும் பார்க்க

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயில் பௌா்ணமி பூஜை

மாா்கழி மாத பௌா்ணமியை முன்னிட்டு, ளியங்குடி அருள்தரும் முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மு... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

ஆலங்குளத்தில் அசுரா தன்னாா்வ அமைப்பினா் சாா்பில் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் 350 மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நல்லூா் விலக்கு முதல் சிவலாா்குளம் விலக்கு வரை சாலையோரம் மரக்கன்றுகள... மேலும் பார்க்க

தேவிபட்டணம் ஆா்.சி. பள்ளியில் வாசிப்பு பயிற்சி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் ஆா்.சி.உயா்நிலைப் பள்ளியில் வாசிப்பு பயிற்சி மற்றும் விநாடி- வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தினமணி நாளிதழ் மற்றும் பள்ளி நிா்வாகம் சாா்பில் நடை... மேலும் பார்க்க

சங்கரநாராயணசுவாமி கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசியையொட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சயன கோல... மேலும் பார்க்க

சிவகிரி அருகே மலையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மலையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தாா். சிவகிரி இந்திரா மேலத் தெருவை சோ்ந்தவா் சிவலிங்கம் மகன் முருகேசன் (32) . தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா். வைகுண்ட ஏ... மேலும் பார்க்க