சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 4 வயது சிறுமி!
மும்பை ரஞ்சி அணியுடன் ரோஹித் சர்மா பயிற்சி!
ரஞ்சி கோப்பை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் சரியாக சோபிக்காத ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகினர். 6 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.
இதனால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள், முன்னணி வீரர்கள் என்றில்லாமல், அனைவரும் உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
சிவப்பு-பந்து கிரிக்கெட் வீரராக தனது எதிர்காலம் கேள்விக்குறி கொண்டிருக்கும் நிலையில், ரோஹித் சர்மா பிசிசிஐயின் மறுஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பிசிசிஐயின் புதிய செயலாளர் தேவஜித் சாய்கியா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதனால், மும்பையில் ரஞ்சி டிராபியின் இரண்டாம் கட்டப் பயிற்சிக்கு முன்னதாக மும்பை அணியுடன் ரோஹித் சர்மா இணைந்து வான்கடே மைதானத்தில் இரண்டு மணிநேர பயிற்சியில் ஈடுபட்டார்.
ஜனவரி 23 ஆம் தேதி ரஞ்சி டிராபி மீண்டும் தொடங்குகிறது. மும்பை அணிக்காக 2015 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக போட்டியில் விளையாடியிருந்தார். இதனால், மும்பையின் அடுத்த போட்டியில் ரோஹித் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.