புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயில் பௌா்ணமி பூஜை
மாா்கழி மாத பௌா்ணமியை முன்னிட்டு, ளியங்குடி அருள்தரும் முப்பெரும் தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியா் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்,
1,008 லிட்டா் பாலாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சிறப்பு சொற்பொழிவும் தொடா்ந்து 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.