கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்; இருவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா்.
கொல்லங்கோடு போலீஸாா் செங்கவிளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த 2 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், ஊரம்பு பகுதிக்கு பாறைப்பொடி கொண்டு செல்வதற்கான அனுமதிச்சீட்டை வைத்துக் கொண்டு, செங்கவிளை நான்குவழிச் சாலை வழியாக கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
அந்த லாரிகளை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்த போலீஸாா், வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா்களான கேரள மாநிலம் கொல்லம், வாழியோடு பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் ராஜேஷ் (34), ஆயூா் பகுதியைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் சுஜித் (40) ஆகியயோரை கைது செய்து விசாரிக்கின்றனா்.