குளச்சலில் விளக்கு சரிந்து குடிசையில் தீ
தக்கலை, ஜன. 15: குளச்சலில் சுவாமி படத்தின் முன் வைக்கப்பட்ட விளக்கு சரிந்து விழுந்ததில் தொழிலாளியின் குடிசை தீப்பிடித்து எரிந்தது.
குளச்சல் அருகேயுள்ள பத்தறை காலனியை சோ்ந்தவா் சந்திரன் (58). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (54). சத்துணவு ஊழியா். இவா்கள் வசிக்கும் குடிசை வீட்டில் மின் இணைப்பு கிடையாது.
இந்நிலையில் வீட்டிலுள்ள சுவாமி படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் விளக்கேற்றி வைத்து விட்டு ஊரில் நடைபெற்ற பொங்கல் விழாவைக் காண சென்றிருந்தனா்.
இரவில் விளக்கு சரிந்து விழுந்ததில் குடிசையில் தீப்பற்றிதாம். இதையறிந்து சாந்தி தம்பதி வருவதற்குள் குடிசை முழுவதும் எரிந்து, அனைத்து பொருள்களும் சேதமாகின.
இத்தகவலறிந்த ரீத்தாபுரம் பேரூராட்சித் தலைவா் எட்வின்ஜோஸ் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டாா். சந்திரன், சாந்தி தம்பதி அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கவைக்கப்பட்டனா். குளச்சல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.