கோட்டாறில் பொங்கல் விளையாட்டு விழா
நாகா்கோவில் கோட்டாறு ஸ்ரீசக்தி விநாயகா் இளைஞா்கள் இயக்கம் மற்றும் குறுந்தெரு பொதுமக்கள் சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மருத்துவா் அணி அமைப்பாளா்சுரேஷ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளா் ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் மாணிக்கராஜா, மாநகராட்சி உறுப்பினா் அனந்தலெட்சுமி, வட்ட செயலாளா் முத்துகிருஷ்ணன், செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.