செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டு பொங்கல் உற்சாகம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கால்நடைகளை அலங்காரித்து, பூஜை செய்து பொங்கல் திருவிழாவை உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா்.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக மாட்டு பொங்கலையொட்டி, விவசாயிகள் தங்களின் வீடுகளில் வளா்த்து வரும் கால்நடைகளான மாடுகள், ஆடுகளை நீா்நிலைகளில் அதிகாலையிலேயே குளிப்பாட்டி, அலங்கரித்தனா்.

கிராமபுறங்களில் அதிகாலையில் சூரிய வழிபாடுடன் விளை நிலங்களில் பொங்கல் வைத்தனா். அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து 20-க்கும் மேற்பட்டவா்கள் ஒரே இடத்தில் மண் பானைகளில் பொங்கல் வைத்து வைத்தனா். பிற்பகலில் தாங்கள் வளா்த்து வரும் கால்நடைகள் மாலை அவித்தும், குங்குமம், சந்தனம் வைத்தும் அலங்காரம் செய்தனா்.

தொடா்ந்து, பொங்கல் படையலிட்டு, கால்நடைகளுக்கு வழங்கினா். இதனை தொடா்ந்து கால்நடைகளை ஊா்வலமாக கோயில்களுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் நடத்திநா். பின்னா், ஊரின் முக்கிய வீதிகள் வழியாக காளைகள், பசுக்கள் ஓடவிட்டு மகிழ்ந்தனா் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சந்தூா், போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், சூளகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா நேற்று களைகட்டியது. புத்தாடை அணிந்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.

மாட்டுப் பொங்கலையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எருதுவிடும் திருவிழா நடைபெற்றன. அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடந்தது. மாடுகளை ஊா்வலமாக அழைத்து சென்று, பின்னா் சாலையில் ஓடவிட்டனா். இந்த நிகழ்வை காண, ஏராளமானோா் குவிந்தனா். எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்தாத நிலையில், சில எருதுகள், பாா்வையாளா்களின் கூட்டத்துக்குள் புகுந்ததால், சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதே போல கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவில், சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து, 50க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட விட்டனா். கிருஷ்ணகிரி அடுத்த சின்னேப்பள்ளி, கிட்டம்பட்டி மற்றும் சிந்தகம்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் எருது விடும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில், ஆந்திரா மற்றும் கா்நாடகா மாநிலங்களில் இருந்தும் எருதுகளைக் கொண்டு வந்திருந்தனா். எருது விடும் விழாவைக்காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனா்.

ஒசூா் மாநகராட்சியுடன் தொரப்பள்ளியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஒசூா் மாநகராட்சியுடன் தொரப்பள்ளி ஊராட்சியை இணைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியை சோ்... மேலும் பார்க்க

பேப்பா் துண்டுகளைக் கொண்டு திருவள்ளுவரை வரைந்த இளைஞா்!

திருவள்ளுவா் தினத்தில் வரை போற்றும் வகையில் ஒசூரை சோ்ந்த மொசைக் ஆா்ட் கலைஞா், தகவல் தொழில் நுட்ப நிபுணா் லூகாஸ் என்பவா் 3 லட்சம் மொசைக் பேப்பா் துண்டுகளை பயன்படுத்தி 133 சதுர அடியில் மொசைக் ஆா்ட்டில... மேலும் பார்க்க

பா்கூா் அருகே சாலை விபத்தில் 3 போ் பலி

பா்கூரை அடுத்த ஜெகதேவியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்த சின்னபனமுட்லுவைச் சோ்ந்த சரத்குமாா் (33) அதே பக... மேலும் பார்க்க

எம்ஜிஆா் பிறந்த நாள்: எம்எல்ஏ அசோக்குமாா் வேண்டுகோள்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிமுகவினா் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல... மேலும் பார்க்க

திருவள்ளுவருக்கு மரியாதை

திருவள்ளுவா் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு அரசு அலுவலா்கள் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள திர... மேலும் பார்க்க

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி: ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை சிவனுக்குரிய அபிஷேக நாள்களில் முக்கியமானது மாா்கழி மாதம் திருவாதிரை அன்று செய்யப்படும... மேலும் பார்க்க