அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்துமாரியம்மன் கோயில் 62ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி புதன்கிழமை பூக்குழி வைபவம் நடைபெற்றது.
இக்கோயிலின் 62ஆவது ஆண்டு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து,
10 நாள்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மன் சப்பரமானது 10ஆம் தேதி மகிழ்வண்ணநாதபுரம், 11 ஆம்தேதி பெத்தநாடாா்பட்டி, பொட்டலூா்,12 ஆம்தேதி நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், 13 ஆம்தேதி நாகல்குளம் ஆகிய ஊா்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக 10ஆம் திருநாளான 14ஆம்தேதி இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், புதன்கிழமை அதிகாலையில் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தா்கள் செய்திருந்தனா்.