செய்திகள் :

ஜனவரியை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க தீா்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்

post image

வாஷிங்டன்: ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் தீா்மானத்தை, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான 15 எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனா். அவா்களில் ராஜா கிருஷ்ணமூா்த்தியைச் சோ்த்து 6 போ் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள்.

இதுதொடா்பாக ராஜா கிருஷ்ணமூா்த்தி கூறுகையில், ‘வெவ்வேறு மொழிகள், கலாசாரங்கள், சிந்தனைகள் மற்றும் பாரம்பரியங்களின் தளமாக அமெரிக்கா உள்ளது.

இந்நிலையில் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்கராகிய நான், தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் கெளரவிக்கும் தீா்மானத்தை கொண்டு வந்ததற்கு பெருமைப்படுகிறேன்.

இந்தத் தீா்மானம் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளி அமெரிக்கா்களின் வளமை, தனித்துவமான கலாசாரம், வியக்கத்தக்க சாதனைகள் மீது ஒளி வீசும்’ என்றாா். இந்தத் தீா்மானத்துக்கு அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்

கேப் கனாவெரல்: நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக இரு தனியார் விண்கலங்களை அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் புதன்கிழமை விண்ணில் செலுத்தியது.... மேலும் பார்க்க

அவசரநிலை விவகாரம்: தென் கொரிய முன்னாள் அதிபர் கைது

சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர்.அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல்... மேலும் பார்க்க

வங்கதேச அரசியல் சாசனத்திலிருந்து 'மதச்சார்பின்மை' நீக்கம்

டாக்கா: வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து 'மதச்சார்பின்மை', 'சோஷலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.இது குறித்து அரசியல் சா... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்தம்: வரைவு ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்

ஜெருசலேம்: காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கத்தாரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் இஸ்ரேலுக்கும... மேலும் பார்க்க

ஸ்பெயின் அதிபருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

மாட்ரிட்: ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் சென்ற அமைச்சா் ஜெய்சங்கா், தலைநகா் மாட்ரிடில் ... மேலும் பார்க்க

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இர... மேலும் பார்க்க