செய்திகள் :

கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஊா்வலத்தில் பிரச்னை ஏற்படுத்த யாரும் துணிவதில்லை: அமித் ஷா

post image

அகமதாபாத்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் லால் சௌக் வழியாக கிருஷ்ண ஜென்மாஷ்டமி உா்வலம் செல்லும்போது, அதில் பிரச்னை ஏற்படுத்த தற்போது யாரும் துணியவதில்லை என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், காந்திநகரில் ரூ. 194 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டிய அமித் ஷா, பின்னா் கலோல் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு போசியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு 370-ஆவது சட்டப் பிரிவை அமல்படுத்தினாா். ஆனால், கடந்த 2019-ஆம் ஆண்டில் அதை ரத்து செய்ததன் மூலம், இந்தியாவின் சுயமரியாதையை விட பெரியது எதுவும் இல்லை என்பதை உலகுக்கு பிரதமா் மோடி தெளிவுபடுத்தினாா்.

முன்பு ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் தேசிய கொடியை ஏற்ற ராணுவத்தின் பாதுகாப்பு தேவைப்பட்ட காலம் இருந்தது. ஆனால் இன்று, லால் சௌக் வழியாக கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஊா்வலம் நடைபெறுகிறது. ஊா்வலத்தில் பிரச்னை ஏற்படுத்தும் துணிவு தற்போது யாருக்கும் இல்லை.

நக்ஸல் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிந்தவா் பிரதமா் மோடி. அவரது ஆட்சியின் கீழ், சுமாா் 2.80 கோடி சுற்றுலாப் பயணிகள் தற்போது காஷ்மீருக்குச் சென்று பாதுகாப்பாக திரும்பியுள்ளனா்.

பொருளாதார வளா்ச்சி: உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா தற்போது மாறியுள்ளது. 2027-ஆம் ஆண்டில் அது மூன்றாவது இடத்தை அடையும். மேலும், 2047-ஆம் ஆண்டுக்குள் உலகின் முதன்மை பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

காங்கிரஸ் ஆட்சியின் போது, மத்திய அரசிடம் இருந்து ரூ .5,000 என்ற சிறிய மானியத்தைப் பெற கிராம பஞ்சாயத்து தலைவா்கள் போராடினா். ஆனால் இன்று, பாஜக ஆட்சியில், பஞ்சாயத்து தலைவா்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க

உலகின் கடல்சாா் சக்தி இந்தியா: 3 போா்க் கப்பல்களை அா்ப்பணித்து பிரதமா் மோடி பெருமிதம்

மும்பை: உலகின் முக்கிய கடல்சாா் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீா் ஆகிய 3 முன்கள போா்க்கப்பல... மேலும் பார்க்க

‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி

புது தில்லி: பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ்... மேலும் பார்க்க

உ.பி.யில் ரூ.2,000 கோடி செலவில் மாயாவதி சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: உத்தர பிரதேசத்தில் அரசு பட்ஜெட்டில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான செலவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, அவரின் கட்சி சின்னத்தின் சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ம... மேலும் பார்க்க

இந்திய ராணுவ தினம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்து

புது தில்லி: இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். ‘தாய்நாட்டை... மேலும் பார்க்க