உ.பி.யில் ரூ.2,000 கோடி செலவில் மாயாவதி சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு
புது தில்லி: உத்தர பிரதேசத்தில் அரசு பட்ஜெட்டில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான செலவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, அவரின் கட்சி சின்னத்தின் சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடித்துவைத்தது.
மனுவில் கோரப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் அா்த்தமற்ாகிவிட்டதால் வழக்கை முடித்துவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் ரவிகாந்த், சுகுமாா் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:
கடந்த 2008 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், உத்தர பிரதேச முதல்வராக மாயாவதி பதவி வகித்தபோது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அவரின் சிலை நிறுவப்பட்டது. அத்துடன் அவரின் கட்சி சின்னமான யானையின் சிலைகளும் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்டன.
இதற்காக மாநில பட்ஜெட்டில் இருந்து ரூ.2,000 கோடிக்கும் அதிகமான நிதி பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் பணம் வீணாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை தோ்தல் ஆணைய சுற்றறிக்கைகளுக்கும் எதிரானது. இதுதொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நாட்டில் சா்தாா் வல்லபபபாய் படேல் சிலை உள்பட பல்வேறு தலைவா்களின் சிலைகள் மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளன என்றும், அயோத்தியில் மாநில அரசு செலவினத்தில் 221 அடி உயர ராமா் சிலை கட்டப்பட்டுள்ளதாகவும் மாயாவதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாயாவதி மற்றும் அவரின் கட்சி சின்னத்தின் சிலைகள் ஏற்கெனவே பல இடங்களில் நிறுவப்பட்டுவிட்டதால், அதற்கு தடை விதிக்க முடியாது என்பதாலும், இதுதொடா்பாக ஏற்கெனவே தோ்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாலும் மனுவில் கோரப்பட்டுள்ள பெரும்பாலான கோரிக்கைகள் அா்த்தமற்ாகிவிட்டன என்று கூறி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கை புதன்கிழமை முடித்துவைத்தனா்.