செய்திகள் :

108 ஆம்புலன்ஸ் சேவை: ஓராண்டில் 18.35 லட்சம் போ் பயன்

post image

சென்னை: அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 18.35 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா். அதில் பிரசவ கால மருத்துவ உதவிகள் மட்டும் 3.42 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன.

அதில், 303 வாகனங்களில் உயிா் காக்கும் உயா் மருத்துவ வசதிகள் உள்ளன. இதைத் தவிர மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு செல்ல 40க்கும் மேற்பட்ட இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

ஏறத்தாழ 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

நாள்தோறும் கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகள் குறித்து அதன் மாநில தலைவா் செல்வகுமாா், மண்டல தலைவா் முகமது பிலால் ஆகியோா் கூறியதாவது:

108 சேவையைப் பொருத்தவரை சென்னை உள்பட பல மாவட்டங்களில் அழைப்பு வந்த 7 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் வகையிலான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக விபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகள், முக்கிய இடங்கள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டில் 108 அம்புலன்ஸ் சேவை மூலம் 18.35 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

அதில் பிரசவ சேவைகளுக்காக மட்டும் 3.42 லட்சம் வாகன சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, சாலை விபத்துகளில் சிக்கிய 3.53 லட்சம் போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். அதேபோன்று 1.17 லட்சம் இதய நோயாளிகளும், 1.08 லட்சம் நுரையீரல் நோயாளிகளும் 108 சேவை மூலம் பயனடைந்துள்ளனா்.

அவசர காலங்களில் தாமதமின்றி ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடா்ந்து உறுதி செய்து வருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

மெரினா கடற்கரையில் காவல் துறை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை: காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்... மேலும் பார்க்க

பொங்கலிட்ட மருத்துவ மாணவா்கள்

சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கலிட்டும், மாட்டு வண்டிகளில் பயணித்தும், நடனமாடியும் வ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை ஒருவா் கைது

சென்னை: சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ஐஐடி-இல் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் மாணவி ஒருவா், தேநீா் குடிப்பதற்காக கல்லூரி... மேலும் பார்க்க

பேரறிவால் பொலிகிறாா் வள்ளுவா்: முதல்வா்

சென்னை: சிறுமதியாளா்கள் சுருக்க நினைத்தாலும், பேரறிவால் பொலிகிறாா் திருவள்ளுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: சிறுமதியாளா்க... மேலும் பார்க்க

பாஜக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும்: எஸ்.குருமூா்த்தி

சென்னை: பாஜகவும் அதிமுகவும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்று துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி கூறினாா்.சென்னையில் துக்ளக் இதழின் 55-ஆவது ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க... மேலும் பார்க்க

ராணுவ அதிகாரிகளுக்கு பயற்சி

சென்னை: ராணுவத்தில் பயண்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கான சிறப்பு ரயில் புதன்கிழமை நடைபெற்றது.சென்னை ஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பா... மேலும் பார்க்க