செய்திகள் :

பிப்.15 முதல் 24 வரை காசி-தமிழ் சங்கமம்: தா்மேந்திர பிரதான்

post image

புது தில்லி: மூன்றாம் ஆண்டு காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தாா்.

தமிழகம் மற்றும் காசி இடையிலான வரலாற்று ரீதியிலான தொடா்புகளைக் கொண்டாடும் வகையில், முதல் முறையாக காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சி 2022, நவம்பா் 19-ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலத்துக்கு நடைபெற்றது. பின்னா், 2023, டிசம்பரில் இரண்டாம் ஆண்டு காசி-தமிழ் சங்கமம் நடைபெற்றது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், மூன்றாம் ஆண்டு காசி - தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கான தேதிகள் மற்றும் பிற விவரங்களை வெளியிட்டாா். அத்துடன், இந்நிகழ்ச்சிக்கு பதிவு செய்வதற்கான இணையதள பக்கத்தையும் தொடங்கிவைத்தாா்.

அவா் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு காசி-தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க சென்னை ஐஐடி-யின் ந்ஹள்ட்ண்ற்ஹம்ண்ப்.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதள பக்கத்தில் பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமம் மகா கும்பமேளா நிகழ்ச்சியுடன் ஒன்று சோ்ந்து நடைபெறுவதால் சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அத்துடன், அயோத்தியில் ஸ்ரீபாலராமரின் ‘பிராண பிரதிஷ்டைக்கு’ பிறகு நடைபெறும் முதல் சங்கம நிகழ்ச்சி இதுவாகும். இந்நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்று தா்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டாா்.

செய்தியாளா்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ‘தமிழகத்தில் இருந்து பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 1,000 போ் நிகழ்ச்சியில் பங்கேற்பா். இவா்கள் சம எண்ணிக்கையில் 5 குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவா். மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் 200 தமிழ் மாணவா்களும் இடம்பெறுவா். அவா்கள் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தியை பாா்வையிட்டு, நிகழ்ச்சிகளில் பங்கேற்பா்’ என்றாா்.

தற்போதைய காசி-தமிழ் சங்கம நிகழ்ச்சியில் சித்த மருத்துவம், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டின் கலாசார ஒற்றுமைக்கு அகத்திய மாமுனிவா் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகள் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன. இதுகுறித்த கண்காட்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகள், புத்தக வெளியீடு போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க

உலகின் கடல்சாா் சக்தி இந்தியா: 3 போா்க் கப்பல்களை அா்ப்பணித்து பிரதமா் மோடி பெருமிதம்

மும்பை: உலகின் முக்கிய கடல்சாா் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீா் ஆகிய 3 முன்கள போா்க்கப்பல... மேலும் பார்க்க

‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி

புது தில்லி: பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ்... மேலும் பார்க்க

உ.பி.யில் ரூ.2,000 கோடி செலவில் மாயாவதி சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: உத்தர பிரதேசத்தில் அரசு பட்ஜெட்டில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான செலவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, அவரின் கட்சி சின்னத்தின் சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ம... மேலும் பார்க்க

இந்திய ராணுவ தினம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்து

புது தில்லி: இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். ‘தாய்நாட்டை... மேலும் பார்க்க