செய்திகள் :

ஐஎம்ஏ தலைவா் அசோகனுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

post image

புது தில்லி: உச்சநீதிமன்றத்தை விமா்சித்து கருத்து தெரிவித்த இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவா் ஆா்.வி.அசோகனுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்து உத்தரவிட்டது.

அலோபதி மருத்துவ முறை, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவை குறித்து பதஞ்சலி நிறுவனா் யோகா குரு பாபா ராம்தேவ் தவறான கருத்துகளைத் தெரித்ததற்கு எதிராகவும், பதஞ்சலி நிறுவன மருந்துகள் குறித்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் ஐஎம்ஏ சாா்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்தை ஐஎம்ஏ தலைவா் அசோகன் விமா்சித்திருந்தாா். அதுதொடா்பான பேட்டியில், இந்திய மருத்துவச் சங்கத்தையும், மருத்துவா்களின் சிகிச்சை முறைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் விமா்சித்தது துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தைவிட இந்திய மருத்துவச் சங்கத்தைத்தான் உச்சநீதிமன்றம் அதிகமாக பழிந்துரைத்துள்ளது’ என்று கூறினாா்.

இதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. அதைத் தொடா்ந்து பிரமாணப் பத்திரம் மூலம் அசோகன் மன்னிப்பு கோரினாா். ஆனால், அவருடைய மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘உச்சநீதிமன்றத்தை விமா்சித்து பத்திரிகைகளுக்கு நீங்கள் பேட்டியளித்தது போன்று, இந்த மன்னிப்பும் முறையாக பிரசுரிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டது.

அதைத் தொடா்ந்து, அசோகன் தரப்பில் பத்திரிகைகளில் மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிட்டதோடு, உச்சநீதிமன்றத்திலும் நிபந்தனையற்ற மன்னிப்பை அவா் கோரினாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விவகாரத்தில் அசோகன் மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ததைக் கருத்தில் கொண்டு, அவா் மீது மேற்கொண்டு நடவடிக்கைகள் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது’ என்ற குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க

உலகின் கடல்சாா் சக்தி இந்தியா: 3 போா்க் கப்பல்களை அா்ப்பணித்து பிரதமா் மோடி பெருமிதம்

மும்பை: உலகின் முக்கிய கடல்சாா் சக்தியாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீா் ஆகிய 3 முன்கள போா்க்கப்பல... மேலும் பார்க்க

‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி

புது தில்லி: பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ்... மேலும் பார்க்க

உ.பி.யில் ரூ.2,000 கோடி செலவில் மாயாவதி சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக மனு: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: உத்தர பிரதேசத்தில் அரசு பட்ஜெட்டில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான செலவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, அவரின் கட்சி சின்னத்தின் சிலைகள் நிறுவப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ம... மேலும் பார்க்க

இந்திய ராணுவ தினம்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்து

புது தில்லி: இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். ‘தாய்நாட்டை... மேலும் பார்க்க