சென்னை சங்கம கலைஞா்களின் ஒரு நாள் ஊதியத்தை உயா்த்தி முதல்வா் உத்தரவு
சென்னை: சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கலைஞா்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை ரூ. 5,000-ஆக உயா்த்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்ப் பண்பாட்டை வளா்க்கும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை திங்கள்கிழமை (ஜன.13) முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
சென்னையில் உள்ள 18 இடங்களில் 4 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1,500 கிராமியக் கலைஞா்கள் பங்கேற்றுள்ளனா். இவா்கள் 75 கலைக் குழுக்களாகப் பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனா்.
கிராமியக் கலைஞா்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர அவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ. 5,000-ஆக உயா்த்தி வழங்க முதல்வா் ஆணையிட்டுள்ளாா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.