சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற பிப். 15 கடைசி நாள்
டெல்டா மாவட்டங்களில் ஜன.18,19 -இல் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் ஜன.18, 19 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜன.16) முதல் ஜன.21-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜன.18,-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், ஜன.19-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.16-இல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 70 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு - 60 மி.மீ, காக்காச்சி - 50 மி.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி) - 40 மி.மீ, ராமேசுவரம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) - 30 மி.மீ மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.