செய்திகள் :

மதுரை: சாயக் கழிவுகளால் 14 மாடுகள் பலி!

post image

மதுரையில் சாயப் பட்டறை கழிவுநீரை குடித்த 14 மாடுகள் பலியாகின.

மதுரை வில்லாபுரம், அவனியாபுரம், மண்டேலா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாயப் பட்டறைகளின் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், கால்வாய்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இந்த நிலையில், கால்வாயிலும், விளைநிலங்களிலும் கலக்கும் சாயக் கழிவுநீரைக் குடிக்கும் மாடுகள் மட்டுமின்றி, பிற கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. சில கால்நடைகள் கழிவுநீரால் பலியும் ஆகின்றன.

மேலும், நிலத்தடி நீரையும் சாயக் கழிவுநீர் பாதிப்பதால், அப்பகுதியில் பயிர்விக்கப்படும் கீரைகள், கிழங்குகள், காய்கறிகளும் விஷத் தன்மையுடனே இருக்கக் கூடும். கழிவுநீரைத் திருப்பிவிடும் சாயப் பட்டறைகளின் இந்தச் செயல்களுக்கு விவசாயிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:பத்ம ஸ்ரீ விருது பெறும் 2 தமிழர்கள்!

இந்த நிலையில், பெருங்குடி பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 900 மாடுகளில், சாயக் கழிவுநீரைக் குடித்த 14 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. மேலும், 70 மாடுகள்வரையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கால்நடைத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்பட 18 பேர் கொண்ட குழு, சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம்: ஏஐசிடிஇ

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பெயரில் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏஐசிடிஇ துணை இயக்குநா் பிரசாந்த் காரத் தொழில்நுட்ப... மேலும் பார்க்க

போா் நினைவிடத்தில் ஆளுநா் மரியாதை

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னை போா் நினைவிடத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். சென்னை காமராஜா் சாலையில் உ... மேலும் பார்க்க

விழுப்புரத்துக்கு முதல்வா் இன்று வருகை!

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விழுப்புரம் மாவட்டத்தில் ஜன.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி... மேலும் பார்க்க

புதுச்சேரி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: நெல்லை ரயில்வே, அரசு போக்குவரத்து ஊழியர் கைது!

புதுச்சேரியைச் சேர்ந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயதான இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மருந்... மேலும் பார்க்க

டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடல்! ரசிகர்கள் மகிழ்ச்சி!

டிராகன் படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய பாடலின் புரோமோ வெளியானது.அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள டிராகன் படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில் ’ஏன் டி விட... மேலும் பார்க்க

ஆளுநர் தேநீர் விருந்து: அதிமுக, பாஜக தலைவர்கள் பங்கேற்பு!

குடியரசு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் குடியரசு நாள் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது. விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள், நீதிபதிகள... மேலும் பார்க்க