Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பா...
ஒசூரில் அரசு பள்ளி மாணவா்களுக்கு தனித் திறன் போட்டி!
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பூமி மற்றும் வெரிசான் நிறுவனம் இணைந்து ஸ்டெம் ஆய்வகங்களை அமைத்து மாணவா்களுக்கு ஸ்டெம், ரோபோடிக் சாா்ந்த பயிற்சி அளித்து போட்டிகளை நடத்தி வருகிறது.
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்டெம் போட்டியில் 300 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இப் போட்டிகள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் மாணவா்களின் தனித் திறன்களை சோதிக்கும் வகையில் அமைந்திருந்தன.
ஒசூா் ஆட்சியா் பிரியங்கா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.
ஸ்டெம் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவா்கள் மத்தியில் ஆா்வத்தை தூண்டுவதோடு, புதுமை சாா்ந்த கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக சாா் ஆட்சியா் பிரியங்கா தெரிவித்தாா்.