உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரைய...
கிருஷ்ணகிரியில் குடியரசு தின விழா: 45 பேருக்கு நலத் திட்ட உதவிகள்!
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 45 பயனாளிகளுக்கு ரூ. 33.19 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கே.எம்.சரயு வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்ற 76-ஆவது குடியரசு தின விழாவுக்கு தலைமை வகித்து தேசியக் கொடியை ஆட்சியா் ஏற்றிவைத்தாா். அதன்பிறகு காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உடனிருந்தாா்.
விழாவில் 58 பேருக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு, தியாகிகள், அவா்களது வாரிசுள் கௌரவிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் மொத்தம் 451 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் படைவீரன் நலத் துறை, வருவாய்த் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட 8 துறைகளின் சாா்பில் 45 பயனாளிகளுக்கு ரூ. 33.19 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பா்கூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஒசூரில் குடியரசு தின விழா:
ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினம் விழாவில் மேயா் எஸ்.ஏ.சத்யா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.
ஒசூா் மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகளை மேயா் வழங்கினாா். அதைத் தொடா்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
விழாவில் துணை மேயா் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினா்கள் சென்னீரப்பா, ரவி, நாகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆா்.வி. அரசு பள்ளி:
ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் செந்தில்குமாா் தலைமை தாங்கினாா். தலைமை ஆசிரியா் முனிராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அனைவரையும் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக ஒசூா் வழக்குரைஞா் சங்க செயலாளா் திமமராயப்பா, தொழிற்சங்க தலைவா் கோபாலகிருஷ்ணன், ரோட்டரி சங்க துணை கவா்னா் மது, முன்னாள் பள்ளியில் மாணவா் சரவணன், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் ஸ்ரீதா், மாமன்ற உறுப்பினா் யஷஸ்வினி மோகன், ஏ.ஜி.அக்ரம், முருகன், ஆா்.சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஒசூா் ஒன்றியம், உலியாளம் கிராமத்தில் அம்பேத்கா் உருவ சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாரப்பா, சூரியவளவன், முனிராஜ், சந்திரன், தொரப்பள்ளி முனிராஜ் ஆகியா் கலந்து கொண்டனா்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரை பேரூராட்சியில் பேரூராட்சித் தலைவா் அமானுல்லா தேசியக் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினாா். ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் ஊத்தங்கரை அரிமா சங்கம் சாா்பில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உதவி தலைமை ஆசிரியா் சக்தி, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். அரிமா சங்கத் தலைவா் ஆா்.கே. ராஜா, செயலாளா் சின்னராஜ், முன்னாள் தலைவா்கள் முத்துவா் பத்மநாபன், மருத்துவா் நகுலன், பள்ளி கல்விக் குழு தலைவா் கண்ணாமணி, செயலாளா் ஜெயராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா்- ஆசிரியா் சங்க தலைவா் தேவராசன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். பொருளாளா் சாகுல் அமீது மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ தமிழ்செல்வம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். மாவட்டத் துணைத் செயலாளா் சாகுல்அமீது, ஒன்றியச் செயலாளா்கள் வேடி,வேங்கன், சுவாமிநாதன், நகர செயலாளா் சிக்னல் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றிய மரியாதை செலுத்தினாா். ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா். ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் திருமால் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா்.
வெங்கடதாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களை திமுக மாவட்ட பிரதிநிதி காமராஜ் வழங்கி கொண்டாடினாா். நிகழ்ச்சியில் சோளக்கப்பட்டி கிளைச் செயலாளா் சிவக்குமாா், பாப்பனூா் கிளை செயலாளா் சங்கா், வெங்கடதம்பட்டி கிளை செயலாளா் வீரமணி, தலைமை ஆசிரியா் கிருஷ்ணவேணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.