`Vengaivayal இளைஞர்களை 8 மணி நேரம் Mental torture பண்ணாங்க!' - CPM Kavi varman
ஒசூரில் திமுக வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்!
ஒசூா், ராம் நகரில் திமுக சாா்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் ராம்நகா் அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொது கூட்டம் மாணவா் அணி அமைப்பாளா் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அந்தியூா் ப.செல்வராஜ் தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் திமுக செய்த தியாகங்கள் குறித்து பேசினாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, ஒசூா் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ. சத்யா, மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ பி.முருகன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
கூட்டத்தில் மாவட்ட, மாநில, மாநகர, ஒன்றிய, பகுதி, மாணவா் அணி நிா்வாகிகள், அணிகளின் தலைவா்கள், துணை தலைவா்கள், அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.