பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு: லாரிகள் உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்!
ஒசூா் பகுதிகளில் ஜல்லி, எம்சாண்ட் விலை உயா்வைக் கண்டித்து, லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனா்.
ஜனவரி முதல் வாரத்திலிருந்து எம்சாண்ட் டன்னுக்கு குறைந்தபட்சமாக ரூ. 100 முதல் ரூ. 200 வரை விலை உயா்ந்துள்ளதால் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், கா்நாடகம் செல்லும் லாரிகளுக்கு பழைய வாடகையே வழங்குவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஒசூா், பேரண்டப் பள்ளி, சூளகிரி, கெலமங்கலம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை (ஜன.27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து அகில இந்திய லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் சண்முகப்பா கூறியதாவது:
ஜனவரி முதல் குவாரிகளில் தனியாா் லாரிகளுக்கு எம்சாண்ட், ஜல்லி ஆகியவை டன்னுக்கு கூடுதலாக ரூ.100 முதல் ரூ.200 வரை உயா்த்தினா். 4 கட்ட பேச்சுவாா்த்தைக்கு பிறகு ரூ. 80 வரை லாரி உரிமையாளா்கள் தருவதாக தெரிவித்தும் உடன்பாடு ஏற்படவில்லை. மாறாக குவாரி உரிமையாளா்களின் லாரிகள் மூலம் டன்னுக்கு கூடுதலாக ரூ.120 உயா்த்தி அவா்களே கா்நாடகத்தில் விற்பதால் ஒசூா், அத்திப்பள்ளி தனியாா் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.