தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலகங்களை பார்வையிட்ட மகாராஷ்டிர குழு!
தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலகங்களை மகாராஷ்டிர குழு பார்வையிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பதிவுத்துறை தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மகாராஷ்டிர மாநில பதிவுத்துறை குழு சென்னை வருகை பதிவுத்துறையில் பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முழுவதுமாக இணைய வழியாக முத்திரைத்தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்துதல், பதிவு செய்த பின்னர் உடனடியாக பத்திரங்களை திரும்ப வழங்குதல், பதிவு செய்த பின்னர் உட்பிரிவு இல்லாத இனங்களில் உடனடியாக பட்டாமாறுதல் செய்தல், நம்பிக்கை இணையம் உட்பட பல முன்னோடித்திட்டங்கள் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
22.01.2025 முதல் 24.01.2025 வரை மகாராஷ்டிர மாநில பதிவுத்துறையில் இருந்து கூடுதல் பதிவுத்துறை தலைவர் தலைமையிலான அலுவலர்கள் குழு ஒன்று பதிவுத்துறை அலுவலகங்களை பார்வையிட்டனர், பின்னர் பதிவுத்துறைத்தலைவரை சந்தித்து தமிழ்நாட்டின் பதிவுத்துறையின் மேம்பட்ட சிறப்பான செயல்பாடுகள் மற்றும் பதிவுத்துறையின் முன்னோடி திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்டனர்.
ஆவணங்களையும் ஒளிவருடல் (Scanning) செய்வதையும் மற்றும் இணையவழி வில்லங்கச்சான்று முறையை பார்வையிட்ட பின்னர் தமிழ்நாடு பதிவுத்துறையை பாராட்டினார்கள் மற்றும் நடைமுறையில் உள்ள ஸ்டார் 2.0 திட்டம் மற்றும் ஸ்டார் 3.0 திட்டம் குறித்த விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டனர்.